விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை) - சொத்து சேர்க்கை
சாதனை உணர்வு அதிகம் மிக்க விருச்சிகராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆதாய ஸ்தானத்தில் சனியுடன் உள்ளார். குரு, ராகுவின் பார்வை ஆதாய ஸ்தானத்தில் பதிகிறது. ஏற்கனவே திட்டமிட்ட செயல்களை தகுந்த பாதுகாப்புடன் செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். வீடு, வாகனத்தில் அனுகூல நிலை உண்டு. தாய்வழி உறவு வகையில் பெறவேண்டிய சொத்து சேர்க்கை கிடைப்பதில் அனுகூலம் உண்டு. புத்திரர்கள் புத்திசாலித்தனத்துடன்நடந்து கொள்வர். படிப்பில் தேர்ச்சி கிடைக்கும். உடல்நலத்திற்கு தகுந்த சிகிச்சை உதவும். கணவன்,மனைவி இடையே சிறு வாக்குவாதங்கள் வரலாம். வெளியூர் பயணங்களை கூடுமானவரை தவிர்ப்பதால் பணம், கால விரயம் மிச்சமாகும். தொழிலதிபர்கள் நிர்வாக நடைமுறை செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்து உற்பத்தி தரத்தை உயர்த்துவர். கடந்த காலங்களில் எதிர்பார்த்த ஒப்பந்தம் எளிதாக வந்துசேரும். வியாபாரிகள் சுறுசுறுப்பான செயல்களால் கூடுதல் விற்பனை இலக்கை அடைவர். உபரி பணவரவு கிடைத்து மூலதன தேவைக்கு பயன்படும். பணியாளர்கள் தகுதி, திறமையில் உள்ள குறைகளை சரிசெய்வர். நிலுவைப்பணி நிறைவேறும். சலுகைகள் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றி பணி இலக்கை நிறைவேற்றுவர். அதிகாரிகளிடம் நன்மதிப்பு, சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவதால் மட்டுமே பிரச்னை வராமல் இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் உற்பத்தி, விற்பனை காண்பர். தாராள பணவரவு கிடைப்பதால் புதிய தொழில் கருவிகள் வாங்குவர். இளம்பெண்களுக்கு நல்ல வரன் அமையும். அரசியல்வாதிகள் அதிகாரிகளிடம் மென்மையான போக்கை பின்பற்றி காரியம் சாதிப்பர். விவசாயிகளுக்கு தாராள மகசூல், கூடுதல் விலை கிடைக்கும். மாணவர்கள் ஞாபகத்திறன் வளர்ந்து படிப்பில் முன்னேற்றம் அடைவர்.
பரிகாரம்: லட்சுமியை வழிபடுவதால் கூடுதல் பணவரவும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும்.
உஷார் நாள்: 19.6.12 மதியம் 12.04 முதல் 21.6.12 இரவு 9.50 வரை
வெற்றி நாள்: ஜூலை 5,6
நிறம்: பச்சை, வெள்ளை எண்: 2, 5