தனுசு (மூலம், பூராடம், உத்திராடம்1) - சிரமமான மாசம் தான்!
சுறுசுறுப்புடன் செயல்புரிந்து வெற்றிபெறும் தனுசுராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் குரு, சுக்கிரனுடன் ஆறாம் இடத்தில் மாறுபட்ட குணத்துடன் உள்ளார். உங்கள் ராசிக்கு நற்பலன் தரும் கிரகங்களாக புதன், கேது செயல்படுகின்றனர். தொழிலில் ஏற்படும் இடைஞ்சலை சரிசெய்வது தொடர்பாக மனக்குழப்பம் ஏற்படும். பேச்சில் நிதானம் கடைபிடிப்பதால் சிரமம் வராமல் தடுக்கலாம். வீடு, வாகனத்தில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை பின்பற்றுவதால் விபத்து, திருட்டு நடக்காமல் தவிர்க்கலாம். புத்திரர்கள் மந்தகதியில் இயங்குகிற கிரகநிலை உள்ளது. அவர்களைக் கண்டிப்பதில் நிதானம் பின்பற்ற வேண்டும். பூர்வசொத்தில் பெற வேண்டிய வளம் எளிதாக கிடைக்கும். தம்பதியர் சுயகவுரவ சிந்தனையால் கருத்து வேறுபாடு கொள்ள இடமுண்டு. குடும்பத்தின் முக்கிய தேவைகளை சரிக்கட்ட சொத்தின்பேரில் கடன் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் புதிய அணுகுமுறை பின்பற்றுவதால் எதிர்பார்த்த உற்பத்தி, பணவரவு கிடைக்கும். நிர்வாகச்செலவு அதிகரிக்கும். வியாபாரிகள் அளவான கொள்முதல் செய்வதால் மூலதன தேவை குறையும். விற்பனை, பணவரவு சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணி இலக்கு நிறைவேறுவதில் தாமதநிலை அடைவர். இயந்திரம், நெருப்பு சார்ந்த பணியில் உள்ளவர்கள் கவனமுடன் பின்பற்றுவது அவசியம். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் கண்டிப்புக்கு இலக்காவர். குடும்பப் பெண்கள் அத்தியாவசிய செலவுகளை மட்டும் செய்வதால் தேவையற்ற சிரமங்களை தவிர்க்கலாம். சுயதொழில் புரியும் பெண்கள் குறைந்த உற்பத்தி, விற்பனை மிதமான பணவரவு காண்பர். அரசியல்வாதிகள் அடாவடிச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பரிந்து பேசுவதால் சிரமம் வரலாம். கவனம். விவசாயிகளுக்கு நடைமுறைச்செலவு கூடும். அளவான மகசூல் உண்டு. மாணவர்கள் செவ்வாய், சனியின் பார்வையால் படிப்பில் பின்தங்குகிற நிலை உள்ளது. வாகனசாகச செயல்களில் ஈடுபடக்கூடாது.
பரிகாரம்: பெருமாளை வழிபடுவதால் குடும்பத்தில் ஒற்றுமை வளரும்.
உஷார் நாள்: 21.6.12 இரவு 9.50 முதல் 24.6.12 காலை 5.11 வரை
வெற்றி நாள்: ஜூலை 7, 8
நிறம்: ஆரஞ்ச், நீலம் எண்: 1, 4