மகரம் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) - நல்ல உடல்நிலை
தன்னைப்போல பிறரையும் நல்வழி நடத்தும் மகரராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சனி ஒன்பதாம் இடத்தில் செவ்வாயுடன் அனுகூலக்குறைவாக உள்ளார். நற்பலன் தரும் கிரகங்களாக சூரியன், குரு, சுக்கிரன், ராகு செயல்படுகின்றனர். செயல்களில் வெற்றி அதிகரிக்கும். வீடு, வாகனத்தில் இப்போதைய வசதி நீடிக்கும். புத்திரர்கள் படிப்பில் சிறந்தும் நல்லகுணங்களை பின்பற்றியும் உங்களின் அன்பைப் பெறுவர். சொத்து சேர்க்கை உண்டாகும். உடல்நலம் பலம்பெறும். கணவன்,மனைவி இடையே சச்சரவை உருவாக்க சிலர் முயற்சிப்பர். குடும்பநலன் பேணுவதில் கவனம் கொள்வதால் மட்டுமே நற்பலன் பெறலாம். தொழிலதிபர்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிபுரிவர். உற்பத்தி அளவு மற்றும் தரம் சிறந்து புதிய ஒப்பந்தங்களை பெற்றுத்தரும். அரசு சார்ந்த உதவி எளிதில் பெறலாம். வியாபாரிகள் சந்தையில் போட்டி குறைந்து விற்பனையில் சாதனை படைப்பர். உபரி பணவரவு உண்டு. பணியாளர்கள் புதிய நுணுக்கங்களை பின்பற்றி பணி இலக்கை நிறைவேற்றுவர். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் ஒருமுக மனநலம் சிறந்து பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவர்வழி உறவினர்களை நன்கு உபசரித்து பெருமை தேடிக்கொள்வர். குடும்ப செலவுக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய ஆர்டர் கிடைத்து உற்பத்தி இலக்கை உயர்த்துவர். உபரி வருமானம் மூலதன தேவைக்கு பயன்படும். அரசியல்வாதிகள் திட்டங்களை நிறைவேற்றி ஆதரவாளர்களிடம் நன்மதிப்பு பெறுவர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். விவசாயிகள் அதிக மகசூல், கால்நடை வளர்ப்பில் உபரி வருமானம் காண்பர். மாணவர்கள் அக்கறையுடன் படித்துதரதேர்ச்சி விகிதத்தைசீராக்குவர்.
பரிகாரம்: மாரியம்மனை வழிபடுவதால் சிரமங்கள் நீங்கும்.
உஷார் நாள்: 24.6.12 காலை 5.11 முதல் 26.6.12 காலை 10.07 வரை
வெற்றி நாள்: ஜூலை 9, 10, 11
நிறம்: ரோஸ், சந்தனம் எண்: 1, 6