கும்பம் (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) - புத்திரரால் பெருமை
துவங்கும் செயலை மனப்பூர்வமுடன் நிறைவேற்றும் கும்பராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சனி, செவ்வாயுடன் சேர்க்கை பெற்று அஷ்டம ஸ்தானத்தில் உள்ளார். இதனால் உங்கள் செயல்களில் தடுமாற்றமும் மனதில் குதர்க்கமான எண்ணங்களும் உருவாகும். அஷ்டம சனியின் சிரம பலன்களை அனுபவித்தாலும் புதன், சுக்கிரனின் அமர்வு ஆறுதல் தருகிற பலன்களை உருவாக்கும். வாக்கு ஸ்தானத்தை செவ்வாய், சனி பார்ப்பதால் பேச்சினால் வம்பு, விபரீதம் உருவாகலாம். கவனம். வீடு, வாகனத்தில் சராசரி பயன் உண்டு. புத்திரர்கள் பெருமைப்படும்படி படிப்பில் முன்னேறுவர். அஷ்டம செவ்வாய், சனி கஷ்டங்களை தருவது மட்டுமின்றி எதிர்பாராத விபத்தையும் தருகிற வல்லமை உண்டு. கவனம். தம்பதியர் பாசம் குறையாத வகையில் செயல்படுவர். சொத்துக்களின் பேரில் சிறிதளவு கடன் பெறுகிற சூழ்நிலை உண்டு. தொழிலதிபர்கள் துறை சார்ந்த இடையூறுகளை கூடுதல் கவனமுடன் அகற்ற வேண்டும். வியாபாரிகள் சரக்கு கொள்முதல் செய்வதில் குழப்பமான சூழ்நிலையை சந்திப்பர். குறைந்த அளவு விற்பனையும் அதற்கேற்ப பணவரவும் கிடைக்கும். பணியாளர்களுக்கு சோம்பல், இடைஞ்சல் காரணமாக பணிகள் தாமதப்படலாம். பணிபுரியும் பெண்கள் கவனக்குறைவால் பணியில் குளறுபடி ஏற்படலாம். அனுபவசாலிகளின் ஆலோசனை கேட்டு செயல்படுவதால் பணி இலக்கு நிறைவேறும். குடும்பப் பெண்கள் கணவரின் பணவரவுக்கேற்ப செலவுகளை திட்டமிடுவர். கர்ப்பிணி பெண்கள் உடல்நல பாதுகாப்பில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுயதொழில்புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பால் வியாபார நடைமுறையை தக்கவைக்கலாம். அரசியல்வாதிகள் அதிர்ஷ்டவசமாக பதவிபெறுவர். விவசாயிகளுக்கு நடைமுறைசெலவு கூடும். அளவான மகசூல் உண்டு. மாணவர்கள் கூடுதல் அக்கறையுடன் படிக்க வேண்டும்.
பரிகாரம்: சிவனை வழிபடுவதால் மனத்தெளிவும் தொழில் அபிவிருத்தியும் ஏற்படும்.
உஷார் நாள்: 26.6.12 காலை 10.07 முதல் 28.6.12 பகல் 1.20 வரை
வெற்றி நாள்: ஜூன் 16, ஜூலை 12, 13
நிறம்: சிமென்ட், மஞ்சள் எண்: 3, 4