உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) - சேமிப்பு கரையும்

மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) - சேமிப்பு கரையும்

கடின உழைப்பால் வாழ்வில் முன்னேற்றம் காணும் மீனராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் குரு மூன்றாம் இடத்தில் மாறுபட்ட பலன் தருகிற வகையில் உள்ளார். சுக்கிரன், கேதுவின் நல்லருள் இந்த மாதம் உங்கள் வாழ்வு சிறக்க துணைநிற்கும். ராசியை செவ்வாய், சனி, சப்தம ஸ்தானத்தில் அமர்ந்து பார்க்கின்றனர். இதனால் உடலில், செயலில் மந்தகதி ஏற்படும். குடும்பச் செலவுக்கான பணவரவு சீராக கிடைக்கும். பேச்சில் உருவாகிற கடினத்தன்மையை தவிர்ப்பதால் சிரமம் குறையும். வீடு, வாகனத்தில் பெரிய அளவிலான அபிவிருத்தி மாற்றம் இப்போது வேண்டாம். சொத்து ஆவணம் பிறர் பொறுப்பில் தரக்கூடாது. உடல்நிலை சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் கரைய வாய்ப்புண்டு. எதிரிகள் விலகிப்போவர். தம்பதியர் வாக்குவாதத்தை குறைப்பதால் பிரச்னை வராமல் தவிர்க்கலாம். தொழிலதிபர்கள் உற்பத்தியை சீராக்குவர். லாபம் ஓரளவுக்கே உண்டு. வியாபாரிகள் கூடுதல் மூலதன தேவைக்கு உள்ளாவர். ஆனால், குறைந்த நிதியுதவியே கிடைக்கும். சுமாரான விற்பனை உண்டு. பணியாளர்கள் கூடுதல் பணிச்சுமையை எதிர்கொள்வர். நிர்வாகத்திடம் நல்ல பெயர் பெறும் நோக்கில் பொறுப்புடன் பணிபுரிவது அவசியம். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றுவதால் பணி இலக்கு குறித்த காலத்தில் நிறைவேறும். சலுகைகள் பெறுவதில் தாமதம் இருக்கும். குடும்பப் பெண்கள் ஆடம்பரச்செலவுகளை தவிர்த்து குடும்பநலம் காத்திடுவர். கணவரிடம் உறவினர் குறித்த விவகாரம் பேசக்கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள் வியாபார அனுகூலங்களை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் பின்பற்ற வேண்டும். போட்டியாளர்க ளிடம் விலகி செயல்படுவது நல்லது. இரவல் நகைகொடுக்க, வாங்கக் கூடாது. அரசியல்வாதிகள் பதவியை தக்கவைக்க கூடுதல் பணிபுரிவது அவசியம். விவசாயிகளுக்கு பயிர் வளர்ப்பு செலவு கூடும். கால்நடை வளர்ப்பில் கிடைக்கிற வருமானம் உயரும். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் சிரமங்கள் மறையும்.
உஷார் நாள்: 28.6.12 பகல் 1.20 முதல் 30.6.12 பகல் 3.52 வரை
வெற்றி நாள்: ஜூன் 17, 18, ஜூலை 14, 15
நிறம்: பச்சை, வயலட்    எண்: 5, 8


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !