உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லை டவுன் சங்கரமடத்தில் 151 திருவிளக்கு பூஜை!

நெல்லை டவுன் சங்கரமடத்தில் 151 திருவிளக்கு பூஜை!

திருநெல்வேலி: நெல்லை டவுன் காஞ்சி சங்கர மடத்தில் காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 119வது ஜெயந்தியை முன்னிட்டு 151 திருவிளக்கு பூஜை நடந்தது. காஞ்சி மகா சுவாமிகள் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு நெல்லை டவுன் காஞ்சி சங்கர மடத்தில் சிறப்பு ஹோமம் மற்றும் வழிபாடுகள் நடந்தது. மாலையில் லலிதா சகஸ்ரநாமம் பாராயணமும், இரவு மணிக்கு 151 திருவிளக்கு பூஜையும் நடந்தது. பூஜையில் தொழிலதிபர் ஆர்.வி.எஸ்.துரைராஜ், முன்னாள் வருமான வரி அதிகாரி ராஜாராம், பொன்னுச்சாமி ஐயர், தொழிலதிபர் ரகமதுல்லா, டாக்டர் பத்ரி நாராயணன், ராகவன், பொறியாளர் திருநாவுக்கரசு, ஓய்வு பெற்ற நூலகம் ஆறுமுகதேவர், சுவாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை காஞ்சி மடத்தின் தென் மண்டல பொறுப்பாளர் நாராயணன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !