உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

 ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில், குண்டம் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.ஆனைமலை, தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கடந்த, 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதில், பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.தொடர்ந்து நேற்று, சிறப்பு பூஜைகள் நடந்தன. வரும், 27ம் தேதி இரவு, அம்மன் ஆபரணம் பூணுதல், ஊர்வலம் நடக்கிறது. 28ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல், இரவு, 10:00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நடக்கிறது. 29ம் தேதி காலை, 7:00 மணிக்கு குண்டம் இறங்குதல், திருத்தேர் ஊர்வலம் நடக்கிறது. 30ம் தேதி திருத்தேர் நிலை நிருத்தம், பட்டாபிஷேகம்; 31ம் தேதி இரவு போர் மன்னன் காவு நிகழ்ச்சிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !