உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா

 சென்னை - திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவிலில், பங்குனி மாத பெருவிழா, நேற்று முன்தினம் இரவு, கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா,  நேற்று முன்தினம் துவங்கி, 29ம் தேதி வரை, நடக்கிறது.


விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. ஏராளமான பக்தர்கள்  பங்கேற்றனர்.தொடர்ந்து, நேற்று சூரிய, சந்திர பிரபை காட்சியருளால் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு, அதிகார நந்தி சேவை நடக்கிறது. வரும், 23ம் தேதி, ரிஷப வாகன புறப்பாடு நடக்கிறது.  விழாவின் முக்கிய நாளான, 25ம் தேதி, சந்திரசேகரர் தேர் திருவிழாவும், பிரம்மனுக்கு காட்சியருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.பரிவேட்டை விழா, 26ம் தேதி நடக்கிறது.அடுத்த நாள், கல்யாணசுந்தரர்  திருக்கல்யாணம், விமானக்காட்சி, வன்னிமரக்காட்சியும் நடக்கிறது. வரும், 28ம் தேதி, சந்திரசேகரர் கடல் நீராடல், திரிபுரசுந்தரி - -தியாகராஜர் திருக்கல்யாண வைபவம், நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின்  கடைசி நாளான, 29ம் தேதி, சந்திரசேகரர் தெப்ப திருவிழா, வெள்ளியங்கிரி விமானத்தில் சுவாமி வீதி உலா, 18 திருநடன காட்சி ஆகியவை நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !