உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரோகரா கோஷத்துடன் பழநி பங்குனி உத்திர விழா துவக்கம்

அரோகரா கோஷத்துடன் பழநி பங்குனி உத்திர விழா துவக்கம்

பழநி: வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா சரண கோஷத்துடன் பழநி பங்குனி உத்திரத்திருவிழா திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திர விழா இன்று (மார்ச் 22) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.இக்கோயிலில் இன்று காலை 9:20 மணிக்கு மேல் 10:20 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. விழாவின் 6ம் நாளான மார்ச் 27 இரவு 8:15 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அதன் பின் வெள்ளி ரதத்தில் சுவாமி வீதியுலா நடக்கும்.ஏழாம் நாளான மார்ச் 28 பங்குனி உத்திரத்தன்று அதிகாலை 4:30 மணிக்கு தீர்த்தவாரிக்கு எழுந்தருளல், காலை 6:00 மணிக்கு தீர்த்தம் வழங்குதல், காலை 9:00 மணிக்கு தந்த பல்லக்கில் எழுந்தருளல் நடைபெறும். காலை 11:00 மணிக்கு மேல் திருத்தேரில் எழுந்தருளல் நடைபெறும். அன்று மாலை 4:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. பத்தாம் நாளான மார்ச் 31 அன்று கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !