உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்க வாகனத்தில் பரமக்குடி முத்தாலம்மன் திருவீதி உலா

சிங்க வாகனத்தில் பரமக்குடி முத்தாலம்மன் திருவீதி உலா

பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவையொட்டி வெள்ளி சிங்க வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்து அருள்பாலித்தார்.

பரமக்குடி முத்தாலம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வருகிறார். இதனையொட்டி கோயில் முன்புள்ள மேடையில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. மார்ச் 28 அன்று இரவு 8:00 மணிக்கு மின்சார தீப தேரில் அம்மன் நான்கு மாட வீதிகளில் வலம் வருவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !