அதிகார நந்தி வாகனத்தில் பூதபுரீஸ்வரர்
ADDED :1675 days ago
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுாரில், அதிகார நந்தி வாகனத்தில், பூதபுரீஸ்வரர் புறப்பாடு, நேற்று நடந்தது.
ஸ்ரீபெரும்புதுாரில், சவுந்தரவள்ளி அம்மன் உடனுறை பூதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், பங்குனி உத்திர விழா, 10 நாட்கள் விமரிசை யாக நடக்கும். இந்தாண்டு பங்குனி உத்திர விழா, கடந்த, வெள்ளிக்கிழமை, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின், மூன்றாம் நாளான நேற்று, அதிகார நந்தி வாகனத்தில், சவுந்தரவள்ளி அம்பாளுடன் சுவாமி எழுந்தருளி, வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான, திருத்தேர் விழா, 25ம் தேதி நடைபெற உள்ளது.