உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் வண்டி மாகாளி சூரசம்ஹார விழா

பரமக்குடியில் வண்டி மாகாளி சூரசம்ஹார விழா

பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி விழாவையொட்டி நேற்று காளி அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்தார்.பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழா மார்ச் 20ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.

நேற்று காலை 12:00 மணிக்கு அம்மன் எட்டு கரங்களுடன்சூலம் கத்தி கேடயம் ஏந்தி காளி அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குறவன், குறத்தி, அம்மன் உள்ளிட்ட வேடம் இட்டு ஆடிப்பாடி வீதி வலம் வந்தனர். மதியம் 2:00 மணிக்கு சின்னக்கடை வீதியில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.பின்னர் மாலை 5:00 மணிக்கு இரட்டை மாடுகள் பூட்டிய கட்டை வண்டியில் காளி வேடமிட்டவர் மேலே அமர்ந்து ஊர்வலம் வந்தார். அப்போது அவரைச் சுற்றி பெண் வேடமிட்ட ஆண்கள் ஆடி சென்றனர். அப்போது சிலம்பாட்டம், புலியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகள் நடத்தப்பட்டன. சின்னக்கடை வீதியில் துவங்கிய ஊர்வலம், பெரிய பஜார், முத்தாலம்மன் கோயிலை சுற்றி மீண்டும் நிலையை அடைந்தது. அங்கு இரவு 8:00 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இரவு 10:00 மணிக்கு ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் சிறப்பு தீபாராதனைக்குப் பின் கோயிலை அடைந்தார்.சூரசம்ஹார விழா ஏற்பாடுகளை வன்னியகுல சத்திரிய மகா சபையினர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !