உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேத்துார் எக்கலாதேவி அம்மன் கோயில் விழா துவக்கம்

சேத்துார் எக்கலாதேவி அம்மன் கோயில் விழா துவக்கம்

 சேத்துார் : சேத்துார் எக்கலா தேவி அம்மன் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு அதிகாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை அம்மனுக்கு பால், தேன், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகத்துடன் சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடக்க கொடியேற்றம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 31 மாலை பூக்குழி விழா நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !