திண்டுக்கல் பெருமாள் கோயில்களில் திருக்கல்யாணம்
ADDED :1673 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் திருக்கல்யாணம் நடந்தது.திண்டுக்கல் நாகல்நகர் வரதராஜப் பெருமாள் கோயிலில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது.மாலை 6:00 மணிக்கு மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோயிலில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.