பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரவிழா பூஜை
ADDED :1673 days ago
பெரியகுளம் : பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரதேர்திருவிழா மார்ச் 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் உற்சவமூர்த்திகளான பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, சிவன், பார்வதி உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிேஷக, ஆராதனை நடக்கிறது. இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா வருகிறது. 4ம் நாள் திருவிழாவில் அர்ச்சகர்கள் கார்த்தி, தினேஷ் ஆகியோர் சிவாயநாமம் போற்றி கீர்த்தனை பாடல் பாடி தீபாராதனை செய்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 9ம் நாள் முக்கிய விழாவாக மார்ச் 27 ல் தேர்திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.