ஆலம்பாடியில் 26ம் தேதி தேரோட்டம்
ADDED :1725 days ago
கண்டாச்சிபுரம்; ஆலம்பாடி கிராமத்தில் உள்ள ஜோதி மாரியம்மன் கோவிலில் வரும் 26ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது.கண்டாச்சிபுரம் அடுத்த ஆலம்பாடி கிராமத்தில் உள்ள ஜோதி மாரியம்மன் கோவிலில் மாசி மகப் பெருவிழா இன்று துவங்குகிறது. அதனைத் தொடர்ந்து வரும் 22ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 25ம் தேதி இரவு பூங்கரக ஊர்வலமும், 26ம் தேதி காலை 7:00 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்தனர்.