எருமப்பட்டியில் மாரியம்மன் கோவில் பூமிதி விழா
ADDED :1668 days ago
நாமக்கல்: எருமப்பட்டியில் பிரசித்தி பெற்ற அக்னி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பங்குனி மாத தேர் திருவிழா, கடந்த, 7ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, மாரியம்மனுக்கு தினமும் சிறப்பு பூ?ஜைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், முக்கிய பண்டிகையான மாவிளக்கு பூஜை நேற்று காலை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். மாலை, 5:00 மணிக்கு நடந்த பூ மிதி விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூ மிதித்தனர். அதேபோல், நன்செய் இடையாறு அக்னி மாரியம்மன் கோவிலில் பூமிதி திருவிழா நடந்தது.