மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூஜை
ADDED :1667 days ago
கிருஷ்ணராயபுரம்: வரகூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, வரகூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தகுடம் எடுத்து வரப்பட்டது. நேற்று அதிகாலை, மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனை செலுத்தும் வகையில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. இதில் வரகூர், மேட்டுப்பட்டியை சுற்றியுள்ள மக்கள் கலந்து கொண்டனர்.