உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியரெட்டியபட்டி பங்குனி திருவிழா

பெரியரெட்டியபட்டி பங்குனி திருவிழா

வடமதுரை: பெரியரெட்டியபட்டியில் விநாயகர், முருகன், மாரியம்மன், காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா நடந்தது. கடந்த மார்ச் 14ல் காப்பு கட்டுதல், சுவாமி சாட்டுதல் நிகழ்ச்சிகளுடன் துவங்கிய விழாவில் ஏராளமான பக்தர்கள் அன்று முதல் விரதம் இருந்தனர்.அம்மன் கொலுவில் வைத்தல், கரகம் பாலித்தல், பாரிவேட்டை போன்ற வழிபாடுகளும், பக்தர்கள் பொங்கல் வைத்தும், தீச்சட்டி, மாவிளக்கு, முளைப்பாரி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இறுதி நாளில் மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை சென்றது.ஏற்பாட்டினை கோயில் தக்கார் சுகன்யா மற்றும் பெரியரெட்டியபட்டி, சின்னரெட்டியபட்டி, புதுக்கலிங்கம்பட்டி, அணைக்குளம்புதுார், காரக்கட்டூர் கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !