திருத்தம் செய்த திருமுருகன்
ADDED :1864 days ago
காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலின் அர்ச்சகர் கச்சியப்ப சிவாச்சாரியார். கவி பாடுவதில் வல்லவரான இவரது கனவில் முருகன் தோன்றி, ‘சிவ ரகசிய காண்டம்’ என்னும் நுாலில் உள்ள தனது வரலாறை நுாலாக எழுதும்படி கட்டளையிட்டார். கச்சியப்பரும் தினமும் நுாறு செய்யுள்களை சுவடியில் எழுதி சன்னதியில் வைத்து விட்டு நடை அடைத்து விடுவது வழக்கம். மறுநாள் காலையில் நடை திறந்தால் சுவடியில் திருத்தம் செய்யப்பட்டிருக்கும். இந்த வகையில் குமரகோட்டம் முருகனே திருத்திக் கொடுத்து உலகின் முதல் எடிட்டராக இருந்திருக்கிறார்.