உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம்

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம்

காஞ்சிபுரம்; ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோற்சவத்தில், நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், வடம் பிடித்து, தேரை இழுத்து சென்றனர்.

காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. இதில், ஏழாம் நாளான நேற்று, தேர் திருவிழா நடைபெற்றது.இதை முன்னிட்டு, ஏகாம்பரநாதர் - ஏலவார்குழலி அம்பாளுடன், காலை, 7:00 மணிக்கு, தேரில் எழுந்தருளினார். காலை, 9:15 மணிக்கு, அறநிலையத் துறை இணை ஆணையர் ஜெயராமன், தேரோட்டத்தை துவக்கி வைத்தார். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மதியம், 1:30 மணிக்கு, தேர் நிலையை அடைந்தது.இவ்விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மற்றும் தொண்டை மண்டல ஆதினம் ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் ஆகியோர் பங்கேற்றனர்.முன்னதாக, தேர் செல்லும் வழிகளில், பக்தர்கள் மாக்கோலம் போட்டனர். சிவபூத வாத்தியங்கள் முழங்க, ஏகாம்பரநாதர், தேரில் ஆடி அசைந்தபடி, நான்கு வீதிகளில் உலா சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !