உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூதபுரீஸ்வரர் தேரோட்டம் வெகு விமரிசை

பூதபுரீஸ்வரர் தேரோட்டம் வெகு விமரிசை

 ஸ்ரீபெரும்புதுார் - ஸ்ரீபெரும்புதுார் பூதபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம், நேற்று விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுாரில், சவுந்தரவள்ளி அம்பாள் சமேத பூதபுரீஸ்வரர் கோவில் உள்ளது.இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா, 10நாட்கள் விமரிசையாக நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா, 19ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவின் முக்கிய தேரோட்டம், நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் பூதபுரீஸ்வரர் எழுந்தருளினார். காந்தி சாலை, திருவள்ளூர் பிரதான சாலை, திருமங்கையாழ்வார் சாலை, தேரடி சாலை வழியாக பவனி வந்த தேரை, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் செல்லும் சாலை முழுதும், தண்ணீர் ஊற்றி, பக்தர்கள் கோலங்கள் போட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !