பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
ADDED :1759 days ago
பொன்னேரி, அகத்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழாவில், பெண் பக்தர்கள், ஆர்வமுடன் தேரின் வடம்பிடித்து இழுத்து சென்றனர்.பொன்னேரி, அகத்தீஸ்வரர் கோவில் பங்குனி பிரம்மோற்சவம், கடந்த, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவின், 7ம் நாள் உற்சவமாக நேற்று, ரத உற்சவம் விமரிசையாக நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூந்தேரில், அகத்தீஸ்வரர் பெருமான் வீற்றிருக்க, பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா, காலை, 7:30 மணிக்கு புறப்பட்டது.மாட வீதிகள் வழியாக சென்ற திருத்தேரை, பெண்கள் ஆர்வமுடன் இழுத்து சென்றனர்.