திருப்பரங்குன்றத்தில் ஏடு கொடுக்கும் விழா
ADDED :1913 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 8ம் நாள் உற்ஸவத்தையொட்டி சிவகாமி அம்பாளுக்கு நடராஜர் ஏடு கொடுக்கும் விழா நடந்தது.காலையில் விடையாத்தி சப்பரங்களில் நடராஜர், சிவகாமி அம்பாள் தனித்தனியாக புறப்பாடாகி, வீதி உலா முடிந்து, கோயில் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினர். சிறப்பு தீபாராதனை முடிந்து நடராஜர் கரங்களில் இருந்த ஏடுகளை சிவாச்சார்யார்கள் பெற்று, சிவகாமி அம்பாளிடம் சேர்ப்பித்தனர்.இரவு பச்சைக் குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடாகினர்.