திருப்பூர், நல்லூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் பல்லக்கு ஊர்வலம்
ADDED :55 minutes ago
திருப்பூர்; நல்லூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பல்லக்கு ஊர்வலம் நடந்தது.
திருப்பூர், நல்லூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. வீதியுலாவில் மனோன்மணி உடனமர் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.