உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றக்குடியில் காவடி எடுத்த பக்தர்கள்

குன்றக்குடியில் காவடி எடுத்த பக்தர்கள்

 காரைக்குடி : குன்றக்குடி சண்முகநாதப்பெருமான் கோயில் பங்குனி உத்திர 10 ஆம் நாள் திருவிழாவான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

குன்றக்குடி சண்முநாதப்பெருமான் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் பத்து நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு பங்குனி உத்திர விழா கடந்த மார்ச் 19 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வெள்ளிக்கேடகம், பூப்பல்லக்கு, தங்கரதம், வையாபுரியில் தெப்பம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்றுமுன்தினம் மாலை நடந்தது.நேற்று காலை உத்திரம் தீர்த்தவிழாவும், இரவு 8:00 மணிக்கு மயிலாடும் பாறைக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடந்தது. பங்குனி உத்திர விழாவின் கடைசி விழாவான நேற்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சண்முகநாதப்பெருமானுக்கு பால்குடம், பால்காவடி, பன்னீர்காவடி, புஷ்பகாவடி, விபூதிகாவடி, பறவைக்காவடி எடுத்தும், அலகு குத்தியும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !