பட்டமங்கலத்தில் பங்குனி தேரோட்டம்
ADDED :1685 days ago
திருப்புத்தூர் : பட்டமங்கலம் மதியாத கண்ட விநாயகர் அழகு சவுந்தரி அம்பாள் கோயிலில், பங்குனித் தேரோட்டம் நடைபெற்றது. கடந்த 20ம்தேதி அம்பாள்யிலில், காப்புக்கட்டப்பட்டு, பங்குனி தேர் உற்சவம் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமி அலங்கார வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்கள் தரிசனம் நடந்தது. நேற்று, காலை விநாயகரும், அம்மனும் தேருக்கு எழுந்தருளினர். மாலை 5.35 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.