உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் தேரோட்டம்

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் தேரோட்டம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

நடுநாட்டு திருப்பதி என போற்றப்படும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 20ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. காலை 8:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீசபெருமாள் ஆலயத்திலிருந்து எழுந்தருளி தேரடியை வந்தடைந்தார். வேத மந்திரங்கள் முழங்க, அலங்கரிக்கப்பட்ட தேரில், சுவாமி எழுந்தருளி, தேரோட்டம் துவங்கியது. கோவிந்தா கோஷம் முழங்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து, முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர்.ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !