சேத்தூர் மாரியம்மன் கோயிலில் பூக்குழி: பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :1731 days ago
சேத்துார் : சேத்துார் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இக்கோயில் பங்குனி விழா மார்ச் 20ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். தொடர்ந்து தினமும் மாலையில் சுவாமி பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் ஒவ்வொருவராகபக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர். குழந்தைகளை கையில் ஏந்தியபடியும் சிலர் பூக்குழி இறங்கியதை கண்ட பக்தர்கள் பரவசத்தில் ஆனந்த கோஷமிட்டனர்.