உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கமுதி முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

கமுதி முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

கமுதி : கமுதி அருகே மேலக்கொடுமலுார் கிராமத்தில் குமரக்கடவுள் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்தனர்.

முருகனுக்கு காலை 4:30 மணிக்கு பால்,பன்னீர், சந்தனம் உட்பட 21 வகையான அபிேஷகம்மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.முருகன் வெள்ளி கவசத்தில் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.முதுகுளத்துார், கமுதி, பரமக்குடி, வீரசோழன் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதேபோன்று முதுகுளத்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில், வழிவிடு முருகன் உட்பட பல்வேறு கோயில்களில் சிறப்புபூஜைகள், தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !