உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேதுக்கரை கடலில் தீர்த்தவாரி உற்ஸவம்

சேதுக்கரை கடலில் தீர்த்தவாரி உற்ஸவம்

திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு சேதுக்கரையில் தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது.

பத்தாம் நாள் நிறைவு விழாவை முன்னிட்டு திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில்இருந்து நேற்று காலை 8:00 மணியளவில் சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் முன்புறம் உள்ள கடற்கரையில்சக்கரத்தாழ்வாருக்கு விசேஷ திருமஞ்சனமும், தீர்த்தவாரி பூஜைகளும் நடந்தது. மாலையில் கருடவாகனத்தில் கல்யாண ஜெகநாத பெருமாளும், அனுமார் வாகனத்தில் ராமரும் கடற்கரையில் எழுந்தருளினார். விசேஷ திருமஞ்சனம் சாற்றுமுறை, கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவை நடந்தது. சேதுக்கரையில்இருந்து மாலை 4:00 மணிக்கு வாகனத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 7:00 மணிக்கு திருப்புல்லாணி கோயிலை வந்தடைந்தது. நிறைவு நாள் உற்ஸவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !