உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கமுதியில் பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன்

கமுதியில் பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன்

முதுகுளத்துார் : கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வினோதமாக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி  பொங்கல்திருவிழா மார்ச் 19ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனர். இந்நிலையில் தினந்தோறும் முத்துமாரியம்மன்  அலங்கரிக்கப்பட்ட பூத வாகனம்,காமதேனு,ரிஷப வாகனம்,யானை,அன்னப்பறவை,சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தனர்.

முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் சேத்தாண்டி வேடம் அணிந்து வினோதமான முறையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து முக்கிய வீதிகளில் பக்தர்கள் ஆடி,பாடி உலா வந்து கோயில் முன்பு  தரையில் படுத்து உருண்டு அம்மனை வழிபட்டு நேர்த்திகடன் செலுத்தினர். பக்தர்கள் சேத்தாண்டி வேடம் அணிவதால் கோடை வெயிலிலிருந்து உடலை பாதுகாத்து கொள்ளவும், தேமல், தோல் வியாதி,  மஞ்சள் காமாலை, அம்மை நோய் ஆகியவற்றில் இருந்து உடலை பாதுகாத்து வருவதாக பக்தர்கள் கூறுகின்றனர். பின் பக்தர்கள் பொங்கல் வைத்தல், மாவிளக்கு, பால்குடம், அக்னிசட்டி எடுத்து  நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !