பழநி முருகன் கோயில் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்று
ADDED :1735 days ago
பழநி : பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் பணியாற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பழநி முருகன் கோயிலில் மார்ச் 22 முதல் மார்ச் 31 வரை பத்து நாட்கள் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. இதில் தினமும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆற்றிலிருந்து தீர்த்த காவடி, அலகு குத்துதல், பறவை காவடி போன்றவை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.இவ்விழாவில் சிறப்பாக பணியாற்றிய கோயில் உதவி ஆணையர் செந்தில்குமார், மக்கள் தொடர்பு அதிகாரி கருப்பணன், மலைக்கோயில் கண்காணிப்பாளர் சங்கர் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதை கோயில் செயல் அலுவலர் குமரகுரு வழங்கினார்.