உத்தரகோசமங்கையில் தேய்பிறை அஷ்டமி விழா
ADDED :1714 days ago
உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் சன்னதி முன்புறமுள்ள ஷேத்திர காலபைரவருக்கு நேற்று மாலை தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.
மூலவருக்கு பால்இ பன்னீர் இளநீர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது. வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டது. மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லி அம்மன் கோயிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.நுாற்றுக்கணக்கான பெண்கள் நெய் விளக்கு ஏற்றினர். ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதானக் கமிட்டியினர் செய்திருந்தனர்.