உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம்,  பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த புதுப்பட்டி கிராமத்திலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உற்சவ மூர்த்திகள் வள்ளி தேவசேனா சமேத அஷ்ட தன மஹா கும்பாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது. இதில் மஹா கணபதி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தன. பூர்ணாஹூதியை தொடர்ந்து வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை, அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து  வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவமும், சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. விழா ஏற்பாடுகளை அ.புதுப்பட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !