தீத்தாகிழவனுாரில் வினோத நேர்த்திக்கடன் விழா
ADDED :1760 days ago
வடமதுரை : அய்யலுார் தீத்தாகிழவனுாரில் காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா நடந்தது. பூக்குழி இறங்குதல்இ முளைப்பாரிஇ அக்னிச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன் வழிபாடுகள் நடந்தது. நிறைவு நாளில் வினோத நேர்த்திக்கடன் வழிபாடாக பலர் உடலில் சேறு பூசிஇ முகத்தில் கரி பூசிஇ மண் கலயத்தில் பழைய சோறு வைத்து கொண்டு கோயில் முன்பு அமர்ந்தனர். உறவினர்கள் அவர்களை விளக்குமாற்றால் அடித்தும்இ பழைய சாதத்தை உடலில் ஊற்றியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் கோயில் குளத்தில் நீராடி மேள தாளம் முழங்க அம்மனை அழைத்து சென்றனர். வினோத வழிபாடு மூலம் உறவுகள் மேம்படும். மழை வளம் பெருகும். நோயில்லாத வாழ்வு கிடைக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை.