திருப்பரங்குன்றத்தில் உற்ஸவ சாந்தி பூஜை
ADDED :1759 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக சுவாமி, தெய்வானைக்கு உற்ஸவ சாந்தி அபிஷேகம், பூஜை நடந்தது.
திருவாட்சி மண்டபத்தில் உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். சுவாமி முன் தங்கம், வெள்ளி குடங்களில் புனித நீர் நிரப்பி பூஜை நடந்தது.11 வகையான திரவிய அபிஷேகங்கள் முடிந்து சுவாமிக்கு தங்ககுடம், தெய்வனைக்கு வெள்ளி குடங்களில் இருந்த புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. மலர் அலங்காரத்தில் சுவாமி, அம்மன் ஆஸ்தான மண்டபத்தை வலம் சென்று அருள்பாலித்தனர்.