விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி தேரோட்டம்
ADDED :1670 days ago
விருதுநகர், : விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய விழாவான பங்குனி பொங்கல் விழா 2020ல் கொரோனா ஊரடங்கு காரணமாக நடக்கவில்லை. இந்தாண்டு பொங்கல் விழா மார்ச் 28ல் கொடியேறுதல், ஏப்.4ல் பொங்கல், 5ல் அக்னிசட்டி எடுத்தல் நடைபெற்று வந்தது. விழாவில் நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். நாளை மஞ்சள் நீராட்டுடன் அம்மன் நகர்வலம் வருதலும் அதன்பின் கொடியுறக்கம் நடைபெறுகிறது.