திருப்புத்தூர் குளத்தில் சிலைகள் கண்டுபிடிப்பு
ADDED :4868 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் தெப்பக்குளம் தூர்வாரும் பணியின் போது பழங்கால கற்சிலைகள் கிடைத்தன. திருப்புத்தூர் தெப்பக்குளம் தற்போது ரூ.2 கோடி செலவில் சீரமைக்கப்படுகிறது. குளத்தில் உள்ள நீர் வெளியேற்றப்பட்டு கழிவுகள் அகற்றும் பணி நடக்கிறது. குளத்தினுள் இருந்து சில கற்சிலைகள் கிடைத்துள்ளன. சுமார் ஒரு அடி உயரமே உள்ள இந்த சிலைகள் தற்போது படித்துறை அருகே வைக்கப்பட்டுள்ளது. மயில்வாகனம்,முருகர், படுத்த நிலையில் உள்ள பெருமாள், நிற்கும் பெருமாள்,மீன் உருவத்துடன் கூடிய சுவாமி,சிவலிங்கம் போன்ற சிலைகள் கிடைத்துள்ளன. இவை எந்த காலத்தைச் சேர்ந்தவை என்பது தொல்லியல் துறையினர் ஆய்வுக்குப் பின்னரே தெரிய வரும்.