திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏலம் தள்ளிவைப்பு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த ஏலத்தில் 11 இனங்கள் கடந்தாண்டை விட கூடுதல் தொகைக்கு போயின. எட்டு இனங்களுக்கு ஏலம் தள்ளி வைக்கப்பட்டது. கோயிலில் 2012-13க்கான நெய்தீப விற்பனை ரூ. 10 லட்சத்து 31 ஆயிரம். வில்வ விற்பனை ரூ. 4 லட்சத்து 71 ஆயிரத்து 300. பத்ரகாளி அம்மன் சன்னதியில் வெண்ணெய் விற்பனை ரூ. 8 லட்சத்து ஆயிரம். முடிகாணிக்கையில் முடி சேகரித்தல் ரூ. 3 லட்சத்து 78 ஆயிரம். சரவணப்பொய்கையில் தற்காலிக கடை நடத்துதல் ரூ. 1 லட்சத்து ஆயிரம். கோயிலுக்குள் உயிர் பிராணிகள் சேகரித்தல் ரூ. 51 ஆயிரத்து 600. அர்சனை குங்குமம், பன்னீர் விற்பனை ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து 500. சரவணப்பொய்கையில் பரிகார வசூல் உரிமை ரூ. 36 ஆயிரத்து 300. மலைமேல் காசிவிஸ்வநாதர் கோயிலில் கடை நடத்தும் உரிமை ரூ. 37 ஆயிரத்து 200. சொக்கநாதர் கோயிலில் நெய்தீப விற்பனை ரூ. 12 ஆயிரத்து 100. கிரிவலப்பாதை புதிய படிக்கட்டு பகுதியில் காபி, டீ கடை நடத்துதல் ரூ. 3 ஆயிரத்து 100க்கு ஏலம் போனது. பிரசாத ஸ்டால், பஞ்சாமிர்தம், விபூதி விற்பனை உட்பட 8 இனங்களுக்கு ஏலம் தள்ளிவைக்கப்பட்டது. துணை கமிஷனர் செந்தில் வேலவன் கூறுகையில், ""மீண்டும் ஏலம் ஜூன் 12ல் நடக்கும், என்றார்.