உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி மகாலெட்சுமி கோயிலில் கும்பாபிஷேகம்

காரைக்குடி மகாலெட்சுமி கோயிலில் கும்பாபிஷேகம்

காரைக்குடி:காரைக்குடி கண்டனூர் பாலையூரில் ஸ்ரீமகாலெட்சுமி கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.மாலை ஆச்சார்யாள் அழைப்பு, எஜமானர் அனுக்ஞை, மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை,10 மணிக்கு எந்திர பிரதிஷ்டை அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது. 6ம் தேதி காலை 8 மணிக்கு திருவாராதனம்,11 மணிக்கு பூர்ணாகுதி சாற்று முறை, மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடந்தன.
கும்பாபிஷேக நாளான 7ம் தேதி காலை விஸ்வரூபம், கோ பூஜை, துவார பூஜை, சாந்தி ஹோமம், மகா பூர்ணாகுதி, யாத்ரா தானம் நடந்தன. காலை 10.40 முதல் 11.28க்குள் கும்பாபிஷேகமும், திருவாராதனம் சாற்று முறையும் நடந்தன.அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பாலையூர் நகரத்தார்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !