உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்பட்டி சங்கரேஸ்வரி புற்றுக்கோயிலில் கும்பாபிஷேக விழா

கோவில்பட்டி சங்கரேஸ்வரி புற்றுக்கோயிலில் கும்பாபிஷேக விழா

கோவில்பட்டி:கோவில்பட்டி சங்கரேஸ்வரி புற்றுக்கோயிலில் மகாகும்பாபிஷேக விழா நடந்தது.கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரி புற்றுக்கோயிலில் நூதன நவகிரக மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ஜூர்ணோத்தாரண அஷ்ட பந்தன மகாகும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கடந்த 4ம் தேதி அதிகாலை மங்களஇசை, தேவதா அனுக்ஞை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யபூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி பூஜை உட்பட்ட சிறப்பு பூஜைகளுடன் பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. மாலையில் செண்பகவல்லியம்மன் கோயில் குளத்திலிருந்து யானையில் புனித கங்கை நீர் எடுத்து வருதல், கிராம சாந்தி வாஸ்து சாந்தி பிரவேச பலி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 5 மற்றும் 6ம்தேதி காலையில் மங்களஇசையுடன் பூஜைகள் துவங்கி சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் 6ம்தேதி சங்கரேஸ்வரி அம்மன் மற்றும் பிரதான தெய்வங்களுக்கு யந்திரஸ்தாபனம், ரத்னநியாஸம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் காலை மங்களஇசையுடன் மகாகும்பாபிஷேக சிறப்பு பூஜைகள் நடந்தது.இதில் 4ம் கால பூஜை, விக்னேஷ்வரபூஜை, புண்யாகவாசனம், பிம்பசுத்தி, வேதிகா அர்ச்சனை, பரிசாகுதி, நாடி சந்தனம், சன்னவதி ஹோமம், மூலமந்திர ஹோமம், வஸ்திர ஆகுதி, மகாபூர்ணாகுதி, சதுர்வேதபாராயணம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாத்ராதானம், கடம் எழுந்தருளல், கோடி சக்தி விநாயகர், சுப்ரமண்யர் மற்றும் சங்கரேஸ்வரி, சங்கரலிங்கசுவாமி, காளியம்மன், விமானம் மற்றும் மூலஸ்தானம், பரிவார தெய்வங்களுக்கும் நூதன மூர்த்திகளுக்கும் ராமேஸ்வரம், பாபநாசம், குற்றாலம், திருச்செந்தூர், மகாலிங்கமலை, ரிஷிகேஷம் மற்றும் காசி ஆகிய இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் ஊற்றி அஷ்ட பந்தன மகாகும்பாபிஷேகம் நடந்தது. மேலும் மகாஅபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது. மகாகும்பாபிஷேக சிறப்பு பூஜைகளை அனவரதநல்லூர் சங்கரநாராயணன், கோவில்பட்டி கணேஷன், பாபநாசம் ஹரிஹரசுதன், சங்கரேஸ்வரி கோயில் அர்ச்சகர் சுப்பிரமணியய்யர் ஆகியோர் செய்தனர். விழாவில் கோயில் நிர்வாக கமிட்டி தலைவர் குருசாமி, செயலாளர் சுப்பையா, பொருளாளர் சுப்பிரமணியன், துணை செயலாளர் தனுஷ்கோடி, துணை தலைவர் தாயப்பன், ஆலோசகர் முருகேசபாண்டி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கருப்பசாமி, மாரிமுத்து, காளியப்பன், சண்முகவேல், பரமசிவன், சுடலைபாண்டியன், பொன்ராஜ், சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !