/
கோயில்கள் செய்திகள் / அரசின் கட்டுப்பாட்டில் இருந்து 51 கோயில்கள் விடுவிப்பு: உத்தரகண்ட் முதல்வர் அறிவிப்பு
அரசின் கட்டுப்பாட்டில் இருந்து 51 கோயில்கள் விடுவிப்பு: உத்தரகண்ட் முதல்வர் அறிவிப்பு
ADDED :1645 days ago
டேராடூன்: உத்தரகண்டில் அரசின் கட்டுப்பாட்டில் இருந்துவந்த 51 கோயில்களை அரசாங்க கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதாக அம்மாநில முதல்வர் தீரத் சிங் ராவத் அறிவித்துள்ளார்.
உத்தரகண்டில் புதிய முதல்வராக பொறுப்பேற்ற தீரத் சிங் ராவத், சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரின்போது, சார் தாம் தேவஸ்தானம் மேலாண்மை மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு கவர்னர் பேபி ராணி மவுரியா, ஒப்புதல் வழங்கியதை அடுத்து, மாநில அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்துவந்த 51 கோயில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து நீக்கி முதல்வர் தீரத் சிங் ராவத் அறிவித்துள்ளார். இதில், பத்ரிநாத், கேதர்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி உள்ளிட்ட கோயில்களும் அடங்கும். உத்தரகண்ட் அரசின் அறிவிப்பை பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமி வரவேற்றுள்ளார்.