கொரோனா தொற்று குன்றத்தில் ஏப்.14ல் சுவாமி புறப்பாடு ரத்து
ADDED :1642 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாத கார்த்திகை தோறும் தங்க மயில் வாகனத்தில் சுவாமி, தெய்வானை ரத வீதிகளில் புறப்பாடு நடக்கும். கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு அறிவுறுத்தலின்படி ஏப்., 14 சித்திரை கார்த்திகை அன்று சுவாமி, அம்மன் கோயிலுக்குள் எழுந்தருளல் நடக்கும் என கோயில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்தார்.