பழநி கோயிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை
ADDED :1736 days ago
பழநி: பழநி மலைக்கோயிலில் பிலவ தமிழ் புத்தாண்டு துவக்கத்தை முன்னிட்டு ஆனந்த விநாயகருக்கு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. யாக கலச நீரில் அபிஷேகம் நடந்தது. வெள்ளி கவச அலங்காரத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருஆவினன்குடி, பெரிய நாயகி அம்மன் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் சமுக விலகலை கடைபிடித்து வழிபட்டனர்.