உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விரும்பியதை பெற ராகவேந்திரருக்கு சங்கல்ப பூஜை செய்யுங்க

விரும்பியதை பெற ராகவேந்திரருக்கு சங்கல்ப பூஜை செய்யுங்க


ராகவேந்திரருக்கு சங்கல்பசேவை செய்வது விசேஷமானது. இதனை மந்திராலயத்திலுள்ள மூலபிருந்தாவனம் அல்லது மிருத்திகா பிருந்தாவனங்களில் (உள்ளூர் ராகவேந்திரர் கோயில்) மேற்கொள்ளலாம். முடியாதவர்கள் வீட்டில் ராகவேந்திரர் படத்தை வைத்து இவ்விரதத்தை மேற்கொண்டு பலன் பெறலாம். முதல்நாள் பிரார்த்தனையின் போது ராகவேந்திரர் முன் இன்ன பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்காக சேவை (விரதம்) மேற்கொள்கிறேன் என்று மனமுருகி வேண்டிக் கொள்ளவேண்டும். மதியவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும். தேவையானால் காலை, இரவு பால்,பழம் சாப்பிடலாம். 3, 5, 7, 21, 48 நாட்கள் வரை இதனை மேற்கொள்வது அவசியம். விரதநாட்களில் காலை, மாலையில் ராகவேந்திரரை 48 முறை வலம் வந்து வணங்குவது நல்லது.  இந்நாட்களில் மதிய நேரத்தில் தூங்குவதோ, வீண்பொழுது போக்குகளில் ஈடுபடுவதோ கூடாது. விரதம் முடிந்த அடுத்தநாள் ஹஸ்தோதகம் (ஒரு பெரியவருக்கு அன்னதானம்) செய்ய வேண்டும். மனதில் விரும்பியதைப் பெற ராகவேந்திர பக்தர்கள் இந்த விரதத்தை மேற்கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !