சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் கோயில் திருக்கல்யாணம்
ADDED :1679 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் கோயிலில் பங்குனி பிரமோத்ஸவ விழா திருக்கல்யாணம் நடந்தது. இதை முன்னிட்டு காலை சுவாமி,தேவியர்களுக்கு பல்வேறு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தன. பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மண்டபத்திற்கு பதில் கோயில் சன்னதியில் பூதேவி, ஸ்ரீதேவி நாராயணப்பெருமாள் எழுந்தருளினார். மகளிர் அணி நிர்வாகிகள் சவுந்தரியம்மாள்,லலிதா திருமண சீர்வரிசை வழங்கினர்.பின் வேதமந்திரம் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.