சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ராமானுஜர் அவதார தினம்
ADDED :1628 days ago
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ராமானுஜரின் 1004 வது அவதார தின விழா நடந்தது.
இக்கோயிலில் ஆழ்வார்கள் சன்னதியில் ராமானுஜர் அருள்பாலிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்த ராமானுஜர் திருக்கோஷ்டியூரில் ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை உலகறியச் செய்தார். நேற்று அவரது 1004 வது அவதார தினமான, சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது மூலவர் மற்றும் உற்சவர் திருமேனிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. தொடர்ந்து சமூக இடைவெளியை பின்பற்றிய சுவாமி தரிசனம் செய்தனர்.