உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவ சாயிபாபா மந்திர் கோவில் கும்பாபிஷேகம்

நவ சாயிபாபா மந்திர் கோவில் கும்பாபிஷேகம்

வேலூர்: வேலூர் அடுத்த பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் உள்ள நவ சாயிபாபா மந்திர் கோவில் மகாகும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, காலை 7 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, 9 மணிக்கு கலசம் புறப்படுதல், 9.30 மணிக்கு கோபுர கும்பாபிஷேகம், தொடர்ந்து, மூலவர் நவ சாயி பாபா, விநாயகர், ஆஞ்சநேயர், மஹாமேரு மற்றும் கும்மாத்தம்மன் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், ரத்தினகிரி பால முருகனடிமை, சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், வேலூர் துணை மேயர் தருமலிங்கம், எம்.எல்.ஏ., கலையரசன், ரவி சுவாமிகள், பிரகாஷ் சிவாச்சாரியார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !