உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பிரம்மோற்சவ கருட சேவை

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பிரம்மோற்சவ கருட சேவை

 திருவள்ளூர் : திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவில் கருட சேவை நடைபெற்றது.

திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று காலை கருட வாகனத்தில் வீரராகவர் கோயில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் தமிழக அரசு கோவில்களில் திருவிழாக்கு தடை விதித்துள்ளதால்,  சுவாமி வீதியுலாவும் கோயில் உட்பிரகாரத்தில் மட்டுமே நடைபெறுகிறது. வரும், 27ம் தேதியுடன், பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !